போக்கோ பிராண்டிங் லேப்டாப் மாடல்கள் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
போக்கோ பிராண்டின் புதிய ப்ரதயேக லேப்டாப்கள் விரைவில் இந்தியாவில் அறிமுகம் ஆகும் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த புதிய தகவலானது இந்தியாவின் பிஐஎஸ் சான்று அளிக்கும் வலைதளத்தில் இருந்து லீக் ஆகி இருக்கிறது.
இரண்டு புது லேப்டாப் மாடல்களின் பேட்டரி முறையே R15B02W மற்றும் R14B02W எனும் மாடல் நம்பர்களுடன் பிஐஎஸ் சான்று பெற்று இருக்கின்றன. இவை யாவும் போக்கோ பிராண்டிங் கொண்டிருக்கின்றன. போக்கோ பிராண்டு இதுவரை ஸ்மார்ட்போன்களை மட்டுமே அறிமுகம் செய்த நிலையில் 2021 ஆண்டில் இந்த நிலை மாறலாம் என தெரிகிறது. போக்கோ லேப்டாப் மாடல்கள் அடுத்த ஆண்டு கூட அறிமுகம் ஆகலாம் என்கிறார்கள்.
இதுதவிர போக்கோ ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலும் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக கூறப்பட்டு இருந்தது.
இந்த ஆண்டு சியோமி நிறுவனம் எம்ஐ நோட்புக் மற்றும் எம்ஐ நோட்புக் ஹாரிசான் எடிஷன் லேப்டாப் மாடல்களை அறிமுகம் செய்தது. போக்கோ லேப்டாப் மாடல்களின் இந்திய வெளியீடு பற்றி அதிகாரப்பூர்வ விரைவிலேயே தகவல் வெளியாகும் என டெக் பிரிய வட்டாரங்களில் இருந்து தகவல் வருகிறது.