PT-6 என்ற பெயருடைய இலங்கை விமானப்படைக்கு சொந்தமான விமானம் ஒன்று திருகோணமலையிலிருந்து புறப்பட்ட நிலையில் வானில் பறந்து கொண்டிருந்தபோதே மாயமானது.

இலங்கை விமானப்படைக்கு சொந்தமான பி.டி -6 விமானத்தில் ஒரு விமானி மட்டும் பயணித்து கொண்டிருந்தார். இந்த விமானம் பறந்து கொண்டிருந்த போது அத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது என முதலில் தகவல் வெளியானது. விமானம் இறுதியாக சூரியபுர பகுதியில் பறந்ததாகவும் இந்த விஷயம் தொடர்பான விசாரணைகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் விமனப்படையிலிருந்து ஊடகத்திற்கு தகவல்கள் கொடுத்தனர்.
இந்நிலையில் தற்போது காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட இலங்கை விமானப்படைக்கு சொந்தமான விமானம் கந்தளாய் பகுதியில் உள்ள ஒரு வயல் பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விமானத்தில் பயிற்சியை மேற்கொண்ட விமானி இதில் உயிரிழந்தார்.