அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்ட பிறகு ஜோ பைடன் முதன் முதலாக செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது கொரோனா காரணமாக பாதித்துள்ள அமெரிக்கா பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்காக வீடுகளுக்கு நேரடி நிவாரத்திட்டத்தின் கீழ் ஒரு டிரில்லியன் டாலர்களும், கொரோனா தடுப்பூசிக்காக 415 பில்லியன் டாலர்களும் வழங்க உத்தேசித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் பெருந்தொற்றினால் நலிவடைந்த சிறு தொழில்கள், வணிக நிறுவனங்களை மீண்டும் கட்டமைக்க 440 பில்லியன் டாலர்களும் செலவழிக்கப்படும் என்றும் ஜோ பைடன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். மொத்தத்தில் கொரோனா பொருளாதார பாதிப்புகளில் இருந்து அமெரிக்க பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்காக கிட்டத்தட்ட இரண்டு டிரில்லியன் டாலர் அளவிற்கு திட்டங்களை அறிவித்துள்ளார் அதிபராக தேர்வாகியுள்ள ஜோ பைடன்.