உடற்பயிற்சியானது கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளவும் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. எப்பொழுதும் ஈசியாக செய்யக்கூடிய இலகுவான உடற்பயிற்சிகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. இவற்றைச் செய்தாலே நம் உடல் ஆரோக்கியம் பெறும்.
நடத்தல்
இது ஒரு இலகுவான அடிப்படையான உடற்பயிற்சியாகும். அனைத்து வயதினரும் செய்யக்கூடியது. குறைந்தது 20 நிமிடங்கள் உங்களால் தொடர்ந்து நடக்க முடிந்தால் நீங்கள் ஆரோக்கியமாக இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.
ஓடுதல்
இப்பயிற்சி கால்கள் மூட்டுக்களை வலிமையாக்கும். முழங்கால் மற்றும் இடுப்பு பகுதிகளை ஆரோக்கியமாக்கும். இந்த பயிற்சி இருதயத்தின் ஆரோக்கியத்தை கூட்டும், அத்துடன் கலோரிகள் அனைத்தையும் எரிக்கும். உங்கள் மூச்சுவாங்காமல் ஓட முடிந்தால் அது நடப்பதைக் காட்டிலும் நல்லது.
நீந்துதல்
இது ஒரு சிறந்த தொழிற்பாடு. நீரின் மிதக்கும்தன்மை நமது உடலுக்கு ஆதாரமாக அமைவதுடன் மூட்டுக்களில் உள்ள வலிகளை இலகுவாக நீக்க உதவுகிறது. நீச்சல் கீழ்வாதம் உள்ளவர்களுக்கு சிறந்தது. ஏனெனில் மேலதிகமாக நீச்சல் மனநிலையை சிறந்த தரத்தில் பேண உதவும்.
.
குந்துதல்
ஆரம்பத்தில் இந்த பயிற்சியில் உங்கள் கால்கள் புதிதாக பிறந்த மான் குட்டியை போல தடுமாற்றம் காணும். எனினும் தொடர்ச்சியான பயிற்சி மூலம் உங்கள் உறுதி நிலையை நீங்கள் மேம்படுத்தலாம். இந்த பயிற்சி பின்முதுகு, இடுப்பு, முழங்கால், கனுக்கால் போன்றவற்றை காலம் முழுவதும் பாதுகாக்க உதவும்.
இந்த ஈஸியான நான்கு டிப்ஸயும் செய்துபாருங்கள். வித்தியாசத்தை உணர்வீர்கள்.