தாம்பரம் அருகே பெருங்களத்தூரில் லாரி டிரைவர் தூங்கியதால் அடுத்தடுத்து இரண்டு அரசு பேருந்துகள் உட்பட நான்கு வாகனங்கள் மோதி பெரிய விபத்துக்கு உள்ளாகியது.
சென்னை தாம்பரம் அடுத்து பெருங்களத்தூர் பேருந்து நிலையம் முன்பு சேலத்திலிருந்து சென்னைக்கு மைதா மாவு ஏற்றி வந்த லாரி ஒன்று வந்துகொண்டிருந்தது.அப்போது லாரி டிரைவர் வெங்கடாச்சலம் திடீரென்று துங்கி விட்டதாக தெரியவருகிறது.அப்போது பெருங்களத்தூர் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த இரண்டு பேருந்துகள் உட்பட 4 வாகனங்கள் மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் அரசு பேருந்துகள் மிக பயங்கரமாக சேதமடைந்தது.
மேலும் சாலைய கடக்க முயன்ற பொதுமக்கள் மீது லாரி மோதியதில் 3 பேர் படுகாயமடைந்தனர். இதில் பீர்க்கன்கரணையைச் சேர்ந்த பத்மநாபன் என்பவர் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் காயமடைந்த அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் உள்ளிட்ட சிலர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர் .விபத்து குறித்து குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்