சின்னத்திரை நடிகை சித்ரா விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பல பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் நடித்து வந்தார். இந்நிலையில் டிசம்பர் 9 ஆம் தேதி படப்பிடிப்பில் பங்கேற்றுவிட்டு சென்னை பூந்தமல்லி அருகே உள்ள விடுதி அறைக்கு திரும்பிய நடிகை சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இது தொடர்பாக சென்னை நசரத்பேட்டை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி, சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் ஹேம்நாத்தை கைது செய்தனர்.
சித்ரா என்பது நிஜப்பெயராக இருந்தாலும் பலரும் அவரது பெயரையே முல்லை என சொல்லும் அளவுக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் அவருக்கு மிகவும் நல்லபெயரை வாங்கிக் கொடுத்தது. அந்த சீரியலை முல்லைக்காகவே பார்த்தவர்கள் அதிகம். தொகுப்பாளினியாக அறிமுகம் ஆனாலும் முல்லையை அதிகமான பேரிடம் கொண்டு சேர்த்தது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்தான். சித்ராவின் மரணம் சின்னத்திரை வட்டாரத்தை ரொம்பவே உலுக்கியது.
இந்நிலையில் மறைந்த நடிகை சித்ராவுடன் பேசுவதாக ஒரு வெளிநாட்டுகாரர் கூறும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது. அந்த வெளிநாட்டுகாரர் சித்ரா பற்றிய தகவல்களை கூறி விட்டு தனது ஸ்டீரியோ ஸ்பீக்கர் முன் அமர்ந்து சித்ராவின் ஆவியிடம் கேள்விகளை கேட்கிறார். அதற்கு ஒரு குரல்பதிலளிப்பது போல் உள்ளது. மூன்று வீடியோக்களிலும் இது போன்ற உரையாடல் இடம்பெற்றுள்ளது. இது இணையத்தில் வைரல் ஆகிவருகிறது.