பரமக்குடி அருகே நயினார்கோவில் பகுதியில் 6 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்தவர் போஸ்கோ சட்டத்திற்கு கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி நயினார் கோவில் ஊராட்சி ஒன்றியம் தலைகுளம் கிராமத்தைச் சேர்ந்த ஆறு வயது சிறுமி தெருவில் விளையாடிக் கொண்டு இருந்துள்ளார்.
அப்போது அந்த சிறுமியிடம் ஆசை வார்த்தைகளை பேசி அதே ஊரைச் சேர்ந்த வேலுச்சாமி பாலியல் ரீதியான தொந்தரவு செய்துள்ளார்.
இதுகுறித்து குழந்தையின் பெற்றோர்கள் கொடுத்த புகாரில், பரமக்குடி அனைத்து மகளிர் போலீஸ் , வேலுசாமி மீது போஸ்கோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.