விஜய் தொலைக் காட்சிகள் மிக பிரம்மாண்டமாக ஒளிபரப்பப்பட்டு வரும் தொடர்களில் ஒன்று தான் பாண்டியன் ஸ்டோர். இந்த சீரியலில் கூட்டுக் குடும்பம் ஒன்று பாசத்தையும், அன்பையும் வெளிப்படுத்தும் விதமாக காட்சிகள் அமைக்கப்பட்டு உள்ளது. இது தமிழ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. இந்த சீரியலில் நடித்த நடிகர்கள் சிலர், விளம்பரப் படங்களிலும் மற்றும் சிலர் சினிமாவிலும் நடித்து வருகின்றனர்.
ஆனால் இந்த கூட்டணியின் மீது யார் கண்பட்டதோ தெரியவில்லை. பாண்டியன் ஸ்டோர்ஸில் முல்லையாக நடித்த சித்ரா கடந்த சிலதினங்களுக்கு முன்பு தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது தமிழகத்தையே உலுக்கியது என்று சொல்லலாம். அவரது மறைவைத் தொடர்ந்து சித்ராவின் கதாபாத்திரத்தில் நடிக்கப் போவது யார் என்று கேள்விகள் சமூக வலைத்தளத்தில் வலம் வரத் தொடங்கியது .அதன் பிறகு இந்த சீரியலில் முல்லை கதாபாத்திரத்திற்கு அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா என்ற தொடரில் நடித்து வரும் அறிவுமணி முல்லையின் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியானது.
தற்போது இந்த சீரியலில் தமிழ் ரசிகர்கள் நல்ல வரவேற்பை பெற்றதால் இதனை ஹிந்தியிலும் ரீமேக் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தியில் ரீமேக் ஆகும் இந்த சீரியலின் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. ஆனால் இதைப் பற்றி அதிகாரப்பூர்வமான தகவல் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.