பாகிஸ்தான் நியூசிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று நடைபெற்றது.
இதில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி தொடக்க ஆட்டக்காரரான மார்ட்டின் கப்தில் 19 ரன்களிலும், கேப்டன் வில்லியம்சன் 13 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்து நியூசிலாந்து அணியின் நம்பிக்கையை உடைத்தனர்.அந்த அணி 11.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 55 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டம் பாதிக்கப்பட்டது.
சூரிய ஒளியின் காரணமாக இந்த ஆட்டம் பாதிக்கப்பட்டது.மைதானத்தில் கண்கூச்சம் இருந்ததாக விளையாட முடியாமல் தடுமாறி வந்தனர். இதனால் பந்தை பிடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து இந்த ஆட்டம் சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது .சூரிய ஒளி மறைந்தபிறகுதான் மீண்டும் ஆட்டம் தொடங்கியது. 20 ஓவர்களில் 173 ரன்கள் சேர்த்தது . அதிகபட்சமாக தேவோன் 45 பந்துகளில் 7 பவுண்டரிகள் ஒரு சிக்சருடன் 60 ரன்கள் எடுத்திருந்தார்.
அடுத்ததாக களமிறங்கிய பாகிஸ்தான் அணி 19.4 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றியை ருசித்தது. அடுத்ததாக நியூசிலாந்து பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரண்டு ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி வருகிற 26-ஆம் தேதி நடக்க உள்ளது.