அக்ரோடெக் ஒருங்கிணைந்த விவசாய உற்பத்தியாளர் நிறுவனமானது கிராமப்புற மகளிரின் முன்னேற்றத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கிவருகிறது. கிராமப்புற மகளிரை பொருளாதாரரீதியாக மேம்படுத்தும் நோக்கத்தில் குழுவாக அவர்களை ஒருங்கிணைத்து ஆடு வளர்க்கும் திட்டத்தை இந்நிறுவனம் செயல்படுத்திவருகிறது.

விழுப்புரத்தை தலைமையிடமாகக் கொண்டு கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, விழுப்புரம், பாண்டிச்சேரி, கன்னியாகுமரி, திண்டுக்கல், திருவண்ணாமலை, திண்டிவனம், கடலூர் ஆகிய ஒன்பது மாவட்டங்களில் ஆடுவளர்ப்புத் திட்டத்தை வெற்றிகரமாக செயல் படுத்திவருகிறது. இந்திய அளவில் செயல்படும் விவசாய உற்பத்தியாளர்கள் நிறுவனத்தில் விவசாயிகளுக்கு ஆடுகளை விலையில்லாமல் வினியோகித்து அவர்கள் ஆடுவளர்ப்பதற்குத் தேவையான உதவிகளையும், வழிகாட்டுதலையும் வழங்கும் ஒரே நிறுவனம் இதுதான். விலையில்லா ஆடுகளை அக்ரோடெக் ஒருங்கிணைந்த விவசாய உற்பத்தியாளர்கள் நிறுவனத்தின் மூலம் பெற்ற பல கிராமப்புற பெண்கள் இன்று பொருளாதாரரீதியாக நல்ல நிலையை எட்டியிருக்கின்றனர்.

விலையில்லாமல் விநியோகம் செய்யப்படும் ஆடுகளின் தொடர் பராமரிப்புக்கும் இந்நிறுவனம் இலவசமாகவே வழிகாட்டுகிறது. இதேபோல் இடைத்தரகர்கள் இல்லாமல் விவசாயிகளே நேரடியாக ஆடுகளை வாங்கவும், விற்கவும் சந்தைக்கு மாற்றாக ‘ஆடு வங்கித் திட்டம்’ என்னும் திட்டத்தையும் இந்த நிறுவனம் செயல்படுத்திவருகிறது. இதன்மூலம் ஏழை விவசாயிகளுக்கு ஆட்டின் எடைக்கு ஏற்ற நியாயமான விலை கிடைக்கிறது. இடைத்தரகர்கள் இல்லாமல் செயல்படுத்தப்படும் இந்த நடைமுறையால் விவசாயிகளுக்கு உரியவிலை கிடைப்பதோடு, வியாபாரிகளுக்கும் நேரடியாக தரமான ஆட்டை வாங்கும் சூழல் உருவாகியுள்ளது.
மத்திய அரசு கிராமப்புற மகளிரை பொருளாதாரரீதியாக மேம்படுத்தும் நோக்கத்தில் இந்தியா முழுவதும் பத்தாயிரம் விவசாய உற்பத்தியாளர்கள் நிறுவனம் தொடங்கப்பட வேண்டும் என எதிர்பார்க்கிறது. மத்திய அரசின் அந்த கனவுத்திட்டத்தை செயல்படுத்தும் முனைப்பில் முன்வரிசையில் இருக்கும் இந்த நிறுவனம் ஆடு வளர்ப்போடு மட்டுமல்லாது, மகளிரின் மேம்பாட்டிற்காக சிறப்பான பலதிட்டங்களையும் செயல்படுத்திவருகிறது.

நாட்டுமாட்டு சாணத்தில் இருந்து விபூதி, வரட்டி, அகல்விளக்கு தயாரித்தல், இய்ற்கையான முறையில் சோப்பு தயாரித்தல் ஆகியவை தொடர்பாக பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. கிராமப்புற மகளிர்களுக்கு இதற்குத் தேவையான மூலப்பொருள்களை வழங்குவதோடு அவர்களிடம் உழைப்புக்கு ஏற்ற ஊதியத்தைக் கொடுத்து அந்தப் பொருள்களைப் பெற்றுக்கொள்ளவும் செய்கிறது. இதன்மூலம் ஒரு கிராமப்புற மகளிர் சராசரியாக 5000 ரூபாய் வரை வீட்டில் இருந்தே வருமானம் ஈட்டமுடியும்.
அக்ரோடெக் ஒருங்கிணைந்த விவசாய உற்பத்தியாளர்கள் நிறுவனமானது இந்தப் பணிகளின் தொடர்ச்சியாக நாட்டுக்கோழி வளர்ப்பின் மூலம் கிராமப் பொருளாதாரத்தை மேம்படுத்தும் பணியிலும் ஈடுபட்டுவருகிறது. அதன்படி ஏழை கிராமப்புற விவசாயிகளைத் தேர்வு செய்து அவர்களுக்குத் தலா 1000 நாட்டுக் கோழிகுஞ்சுகளை இலவசமாக வழங்க உள்ளது. அந்த கோழிக்குஞ்சுகளை வளர்ப்பதற்கு ஏற்ற தரமான கோழிக்கூண்டை அக்ரோடெக் ஒருங்கிணைந்த விவசாய உற்பத்தியாளர்கள் நிறுவனமே இலவசமாக அமைத்துத்தருகிறது. அதுமட்டும் இல்லாமல் கோழிவளர்ப்புக்கான தீவனங்கள், நோய் மேலாண்மை, நாட்டுக்கோழி வளர்க்கும் நுட்பங்கள் ஆகியவற்றையும் நிறுவனம் முற்றிலும் இலவசமாக வழங்கிவருகிறது. மேலும் விவசாயிகள் இந்த நாட்டுக்கோழி குஞ்சுகளைப் பெற்று மூன்று மாதங்கள் வளர்த்த பின்பு, கோழிகளை அக்ரோடெக் நிறுவனமே கொள்முதல் செய்து சந்தைப்படுத்துகிறது. இதில் விவசாயிகளின் உழைப்புக்கு ஏற்ற நல்ல ஊதியமும் வழங்கப்படுகிறது.

கிராமப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் நாட்டுக்கோழி வளர்ப்பு முக்கியப்பங்கு வகிக்கிறது. அக்ரோடெக் ஒருங்கிணைந்த விவசாய உற்பத்தியாளர்கள் நிறுவனமானது, தான் செயல்பட்டுவரும் 9 மாவட்டங்களிலும், நாட்டுக்கோழி வளர்ப்புத் தொழிலை விரிவாக்கம் செய்ய விரும்புகிறது. விவசாயிகளுக்கு மட்டுமல்லாது, தொழில்ரீதியாக இதை செய்வோரும் நாட்டுக்கோழி வளர்ப்பில் முதலீடு செய்வது நிறைவான வருவாய் ஈட்டமுடியும்.
அக்ரோடெக் ஒருங்கிணைந்த விவசாய உற்பத்தியாளர்கள் நிறுவனமானது பங்குதாரர்கள், தொழிலில் ஆர்வம் உள்ளவர்களை இணைந்து செயல்பட வரவேற்கிறது. முதலீட்டிற்கு ஏற்ற நல்ல வருமானம் கொடுக்கும் இதுதொடர்பாக கூடுதல் விபரங்களை முதலீடு செய்வோர் தெரிந்துகொள்ள 9884299871/ 7010144851 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம்.