இது ஸ்மார்ட் போன்களின் காலம். இந்தியர்கள் நேரத்துக்கு சரியாக சாப்பிடுகிறார்களோ இல்லியோ, அடிக்கடி செல்போனை பார்த்துக்கொள்ள தயங்குவதில்லை. இப்படியான சூழலில் இந்தியர்கள் சராசரியாக நாள் ஒன்றுக்கு சராசரியாக 7 மணிநேரம் செல்போனுக்குள் மூழ்கி இருப்பதாக ஒரு செல்போன் நிறுவனம் அண்மையில் ஆய்வு முடிவை வெளியிட்டது. அந்த அளவுக்கு செல்போன் பயன்பாடு அதிகரித்து இருப்பதாலேயே புதுரக ஸ்மார்ட் போன்களும் வந்துகொண்டே இருக்கிறது.
இப்படியான சூழலில் ஒப்போ நிறுவனமானது பைண்ட் எக்ஸ் 2021 என்று பெயரிடப்பட்ட புதிதாக ரோலபில் கான்செப்ட் போனினை அறிமுகம் செய்ததுள்ளது.இதன் விற்பனை இதுவரை துவங்கவில்லை. இப்போது ஒப்போ நிறுவனம் ஜப்பானை சேர்ந்த வடிவமைப்பு நிறுவனமான டெண்டோவுடன் இணைந்து புதிதாக ஸ்லைடு கான்செப்ட் போனினை உருவாக்கி வருகிறது.

புதிய ஸ்லைடு போன் மூன்று ஹின்ஜ்களை கொண்டிருக்கிறது. இந்த வடிவமைப்பு போனினை ஏழு வெவ்வேறு அளவுகளில் மடிக்க செய்கிறது. இப்போது உள்ள ஹைடெக்னாலஜிக்கு ஸ்மார்ட்போன்களில் இருந்து முற்றிலும் புதுவிதமான பயன்பாட்டை மக்கள் எதிர்பார்ப்பதால், இந்த புதிய முயற்சியில் இறங்கி இருப்பதாக ஒப்போ மற்றும் நென்டோ நிறுவனம் தெரிவித்துள்ளன.
புதிய ஸ்லைடு போன் வெளியாக இன்னும் சிலமாதங்கள் ஆகும் என தயாரிப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், புதிய கான்செப்ட் மாடல் சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாகவே இந்த இரு நிறுவனங்களும் இணைந்து ட்ரூ வயர்லெஸ் கான்செப்ட்டை உருவாக்கின. அதுதான் பவர் ஹப் இது வயர்லெஸ் சார்ஜிங் செய்தபடி ஸ்பீக்கரில் இசையை தொடர்ந்து இயக்கும் திறன் கொண்டிருக்கும்.
இப்படியான தகவல் பரவிய நிலை ஒப்போ நாங்கள் வணிகரீதியாக ரோலபுல் போனை செய்யவில்லை என அறிவித்துள்ளது. அதேநேரம் சந்தையில் அதேபோல் வேறு யாரும் முந்திக்கொண்டு வந்துவிடக் கூடாது என்பதால் தான் ஒப்போ நிறுவனம் அப்படிச் சொல்வதாகவும் கூறப்படுகிறது.