டெல்லியில் கொரோனா வைரசுக்கு எதிரான பணியின்போது இறந்த மருத்துவர் ஹிதேஷ் குப்தா இல்லத்துக்குச் சென்று ஒரு கோடி ரூபாய் நிதினுதவி வழங்கினார் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்.
கொரொனா பணியில் உயிரிழக்கும் மருத்துப்பணியாளர்கள், அரசு ஊழியர்களுக்குஒரு கோடி நிதியுதவி வழங்கப்படும் என ஏற்கனவே டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சிக்கு பிறகு முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களிடம் கூறுகையில், “அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்க மத்திய அரசு முன்வர வேண்டும். இல்லையென்றால் டெல்லி மக்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி டெல்லி அரசே வழங்கும். தடுப்பூசி குறித்து முழுமையாகத் தெரியாமல் யாரும் தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம். கொரோனா ஒழிப்புப் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்களை ஊக்கப்படுத்தும் வகையில், இந்தப் பணியில் உயிரிழந்த மருத்துவர் ஹிதேஸ் குடும்பத்தாருக்கு டெல்லி அரசு கூறியபடி கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கப்பட்டது. மருத்துவர் ஹிதேஸ் மனைவி நன்கு படித்தவர் என்பதால் அவருக்கு டெல்லி அரசு சார்பில் பணி வழங்கப்படும்” என்றார்