ஒலிம்பிக் போட்டிகள் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும். கடந்த 2016-ம் ஆண்டு ரியோ டி ஜெனிரோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றன.
அதன்பின் டோக்கியோவில் 2020 ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 9-ம் தேதி வரை நடைபெற்றிருக்க வேண்டும். ஆனால் கொரோனா பாதிப்பால்,ம் போட்டிகளை ஒத்திவைக்க வேண்டும் என விளையாட்டு வீரா்கள் மற்றும் பல்வேறு தரப்பினா் வலியுறுத்தினா். இதையடுத்து டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டி ஒத்திவைக்கப்பட்டது.

கொரோனா வைரஸ் பரவலால் ஓராண்டுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஒலிம்பிக்ஸ் போட்டி வரும் 2021-ம் ஆண்டு ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 8-ம் தேதி வரையும் பாரா ஒலிம்பிக்ஸ் போட்டிகள் ஆகஸ்ட் 24 முதல் செப்டம்பர் 5-ம் தேதிவரையும் நடைபெறும் என ஐ.ஓ.சி போட்டி அமைப்புக் குழு உள்ளிட்டவை அறிவித்தன.