எண்ணெய் வழியும் முகத்தால் சிலநேரங்களில் முகத்தின் அழகே கெட்டுப்போகும் இதை எப்படி சரி செய்யலாம் என வாங்க பாப்போம்.
நம்மில் பல பேருக்கு இருக்கும் அழகு சார்ந்த பிரச்சனைகளில் ஓன்னு தான் இந்த எண்ணெய் வழியும் முகம். முகத்தில் அதிகம் எண்ணெய் வடிந்தால் முதலில் முகத்தை அடிக்கடி கழுவ பழக வேண்டும். இப்படி செய்வதால் முகத்தில் எண்ணெய் பசை குறைந்து முகம் புத்துணர்ச்சியுடன் இருக்கும். இதுபோக முகத்தில் சோப்பு போட்டு கழுவுவதற்கு பதில் கடலை மாவு போட்டு கழுவினால் முகம் எண்ணெய் பசை நனறாக விலகி பளபளப்பாக ஜொலிக்கும்
தக்காளியை எடுத்து அதன் சாறை நன்றாக பிழிந்து அதை முகத்தில் தடவி ஊறவைத்து முகத்தை கழுவினால் எண்ணெய் பசை நீங்கி முகம் பளிச்சென மாறுவதை காணலாம். அதனுடன் முகத்தில் கொஞ்சம் மோரை கூட பூசி சிறிது நேரத்திற்குப்பின் கழுவி எடுததால் எண்ணெய் தன்மையானது குறையும். காலையில் எழுந்ததும் வெள்ளரி காயை சிறிது சிறிதாக வெட்டி உங்கள் முகத்தில் தேய்த்து வாருங்கள். முகத்தில் இருக்கும் எண்ணெய் பசை விலகி முகம் பொலிவு பெரும். மேற்கூறிய இந்த எளிய தீர்வுகளையெலலாம் செய்வதன் மூலம் முகத்தில் இருக்கும் எண்ணெய் பசை தன்மையை சரிசெய்து பொலிவான முகத்தை நம்மால் பெறமுடியும்