நாம் தமிழ்ர் கட்சியை சேர்ந்த கல்யாண சுந்தரம் அதிமுக்வில் இணைந்தார் நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் கல்யாண சுந்தரம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுக வில் இணைந்தார்.
சமீப காலங்களாக நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் மற்றும் கட்சியின் மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் கல்யாண சுந்தரம் ஆகியோருக்கு இடையே கருத்து மோதல்கள் இருந்ததாக கூறப்பட்டது. கல்யாண சுந்தரம் போன்ற ஆட்கள் கட்சிக்கு வேலை செய்யாமல் தனக்கு என்று ஒரு கூட்டத்தை கட்சிக்குள்ளேயே வளர்த்து வருவதாக சீமான் குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில் கல்யாணசுந்தரத்தின் செயல்பாடுகள் கட்சிக்கு விரோதமாக இருப்பதாக கூறி அவருடன் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் யாரும் தொடர்பு கொள்ள வேண்டாம் என கட்சி அறிவித்ததாக கூறப்பட்டது. இதற்கிடையில் கல்யாண சுந்தரம் தான் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
இந்நிலையில் சென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் கல்யாணசுந்தரம் அதிமுக வில் இணைந்தார். அமைச்சர் எஸ்பி வேலுமணியும் அப்போது உடனிருந்தார்.