தற்போது நோக்கியா நிறுவனத்தின் புதிய பியூர்புக் லேப்டாப் மாடலின் டீசர் வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்த டீசரில் லேப்டாப்பின் முன்புறம் தோற்றம் காட்சியளிக்கிறது. இதன் மேல்புறம் வெள்ளையும் கீழ்புறத்தில் கருப்பும் அமைந்துள்ளது. இது சற்றே வளைந்த டிசைனை கொண்டிருக்கிறது குறிப்படத்தக்கது.
டீசர்களின் படி புதிய நோக்கியா லேப்டாப் குறைவான எடையுடன் அதிக செயல்திறன் மற்றும் தலைசிறந்த அனுபவத்தை அனைவருக்கும் வழங்கும் என தெரிகிறது. புதிய லேப்டாப் ஆனது விரைவில் அறிமுகமாகும் என ஒரு குறிப்பு இருக்கிறது.இருபபினும் சரியான வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
நோக்கியாவில் NKi510UL85S மற்றும் NKi310UL28S மாடல் நம்பர் கொண்ட இரு லேப்டாப் மாடல்கள் இந்தியாவின் பிஐஎஸ் சான்றளிக்கும் வலைதளத்தில் இடம்பெற்று இருந்தன. வலைதள விவரங்களின் படி புதிய லேப்டாப் இன்டெல் கோர் ஐ3 மற்றும் கோர் ஐ5 பிராசஸர்கள் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது