அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் இந்த வருடம் அரையாண்டு தேர்வு கிடையாது என பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே எ செங்கோட்டையன் ஈரோட்டில் தெரிவித்தார்.
செய்தியாளர்களிடம் பேசும் போது அமைச்சர் அரையாண்டு தேர்வை பொருத்தவரையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தேர்வு இல்லை. தனியார் பள்ளிகளில் தேவைப்பட்டால் மட்டும் ஆன்லைன் முறையில் நடத்திக் கொள்ளலாம் என்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆகவே அரையாண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டிருக்கிறது, என அவர் மேலும் கூறினார்.
கொரோனா காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் இன்னும் திறக்கப்படாத சூழலில் 9 ஆம் வகுப்பு வரை 50 சதவிகிதம் பாடங்கள் குறைக்கப்படுகின்றன. மேலும் 10,11,12 ஆம் வகுப்புகளுக்கு 65 சதவிகிதம் என்ற அளவில் பாடங்கள் குறைக்கப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா பரவலை தடுப்பதற்காக பள்ளிகள் இன்னும் திறக்கப்படாத சூழலில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பாடங்கள் நடத்தப்படவில்லை. ஆனால் தனியார் பள்ளிகள் மட்டும் பாடங்களை ஆன்லைன் மூலம் நடத்தி வருகின்றன.