தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளன. இந்த நிலையில் மக்கள் நீதி மய்ய தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் முதல் ஆளாக பிரசார பயணத்தை தொடங்கி தீவிரப் பிரச்சாரம் செய்துவருகிறார்.

முதற்கட்டமாக மதுரையில் தனது பிரசார பயணத்தை தொடங்கிய கமல் இப்போது புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பிரசார பயணம் மேற்கொண்டு வருகிறார். கமல் இரண்டாம் கட்ட பிரசாரம் செய்துவரும் நிலையில் தான் போகும் ஊர்களில் செல்போன் சிக்னல் கிடைப்பதில் சிக்கல் இருப்பதாக ஆதங்கப்பட்டுள்ளார். அந்த ஆதங்கத்தை அப்படியே ட்விட்டரில் கொட்டித்தீர்த்திருக்கிறார். கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளதாவது.
“தமிழகம் முழுக்கப் பயணித்துக் கொண்டிருக்கிறேன். பல கிராமங்களில் செல்போன் சிக்னல் இல்லை. போதிய இணைய வசதி இல்லை. கிராமத்துப் பிள்ளைகள் லாக் டவுனில்(Lockdown) ஆன்லைன் வகுப்புகளைத் தொடர முடியவில்லை.
