உலகை அச்சுறுத்திக்கொண்டிருகும் கொரோனா வைரசுக்கு ஃபைசர், ஸ்புட்னிக் வி எனும் 2 கொரோனா தடுப்பூசிகள் தற்போது பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டு இருக்கிறது. இந்தத் தகவலை பிரிட்டன் மற்றும் ரஷ்யா ஆகிய 2 நாடுகளுமே உறுதிப்படுத்தி உள்ளன. இந்நிலையில் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்ட பிறகு 2 மாத காலம் வரை மது அருந்தக்கூடாது எனும் தகவலை ரஷ்யாவின் சுகாதாரப் பாதுகாப்புத் துறை தலைவர் வெளியிட்டு உள்ளார். இது குடிமகன்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு கிளாஸ் ஒயின் அல்லது பீர் போன்றவை கொரோனா தடுப்பூசியின் செயல் திறன் குறையாது எனக் கூறி உள்ளனர். ஆனால் ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பூசியை பொது மக்களுக்கு கொடுக்க இருக்கும் ரஷ்யாவின் சுகாதாரத்துறை கொரோனா தடுப்பூசியை செலுத்திய பிறகு அடுத்த 2 மாதங்களுக்கு மது அருந்தக்கூடாது என வலியுறுத்தி வருகிறது.
மேலும் முதல் தடுப்பூசி செலுத்திக் கொண்ட பிறகு அடுத்த 21 நாட்கள் கழித்து மீண்டும் இன்னொரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்படும். அப்படி அடுத்த டோஸ் தடுப்பூசியை எடுத்துக் கொண்ட பின்பும் தொடர்ந்து 42 நாட்கள் வரையிலும் மது அருந்தக்கூடாது என அறிவுறுத்தப் பட்டு உள்ளது. உலகிலேயே அதிகம் மது அருந்தும் நாடுகளில் ரஷ்யா 4-வது இடத்தில் உள்ளதால் , அந்நாட்டவர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்