காதி நிறுவனத்தின் புதிய பொருள்கள் அறிமுக விழா டெல்லியில் நடந்தது. இதில் மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி கலந்து கொண்டார். இதில் மாட்டு சாணத்தில் தயாரிக்கப்பட்ட “பிரகரிதிக் பெயிண்ட்” என்ற புதிய வேதிக் பெயிண்டை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிமுகப்படுத்தினார்.
டிஸ்டம்பர், பிளாஸ்டிக் எமல்ஷன் என இரண்டு வகைகளில் இந்த பெயிண்ட் கிடைக்கிறது. முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இந்த பெயிண்ட் சுற்றுசூழலுக்கு மாசு மற்றும் கெடுதல் ஏற்படுத்தாது. அதே சமயம் சிறந்த கிருமி நாசினியாகவும் விளங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாட்டு சாணத்தில் பெயிண்ட் தயாரிப்பதால் விவசாயிகளின் லாபம் அதிகரிக்கும் என்றும். விவசாயிகளின் லாபத்தை இரட்டிப்பாக்கும் பிரதமர் நரேந்திர மோடியின் லட்சிய திட்டத்தின் கீழ் இந்த பெயிண்ட் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்