நாடாளுமன்ற ப்ட்ஜெட் கூட்டத்தொடர் நட்ந்துவருகிறது. அதன் ஒருபகுதியாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை 11 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்ய இருக்கிறார். நிர்மலா சீத்தாராமன் நிதி அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு அவர் மூன்றாவது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக காகிதத்தில் அச்சிடமால், பட்ஜெட் ஆவணங்கள் அனைத்தும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன. மொபைல் ஆப் மூலம் அனைவரும் தெரிந்துகொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பரவலால் இந்திய பொருளாதாரம் மோசமான நிலையில் உள்ளது. உள்நாட்டு உற்பத்தி விகிதமும் மைனசில் உள்ள நிலையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த பட்ஜெட்டில் வருமான வரிச் சலுகைகள் உள்ளிட்ட சலுகைகள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் ஏற்பட்டுள்ளது.