கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக உலகமெங்கும் கிறிஸ்மஸ் பண்டிகை கொண்டாட்டங்கள் வெகுவாக குறைந்துள்ளது. பிரிட்டனில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது அதனால் நோய்தொற்று கட்டுக்குள்வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மீண்டும் கட்டுப்பாடுகளை அறிவித்து பிரதமர் போரிஸ் ஜான்சன் உத்தரவிட்டுள்ளார்.
பிரிட்டனில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவதாகவும் இந்த வைரஸ் முந்தைய வைரசை விட 60% மிக அதிகமாக பரவக் கூடியது எனவும் அவர் அறிவித்துள்ளார்.லண்டன் மற்றும் தென் கிழக்கு பகுதிகளில் நான்கு அடுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த கட்டுப்பாடுகள் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து கிறிஸ்மஸ் பண்டிகைக்கு தேவையான பொருட்களை வாங்க ஏராளமான மக்கள் கடைகளில் குவிந்துள்ளனர்