லண்டனில் கொரோனா வைரஸ் நோய்க்கு எதிரான தடுப்பூசியை பொது மக்களுக்கு செலுத்த முதன் முதலாக இங்கிலாந்து அரசானது அனுமதி வழங்கியிருக்கிறது. அந்த அனுமதியின்படி பைசர் மற்றும் பயோ என்டெக் போன்ற நிறுவனங்கள் சேர்ந்து தயாரித்த கொரோனா தடுப்பூசிகள் இங்கிலாந்து மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.
இதனை தொடர்ந்து அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் தங்கள் நாட்டு மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை துவங்க நடவடிக்கை எடுத்து வருகின்றன.
இந்த நிலையில் இங்கிலாந்து அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி கடந்த 8 ஆம் தேதியில் இருந்து 20 ஆம் தேதி வரை 6 லட்சத்து 16 ஆயிரத்து 933 பேருக்கு கொரோனா தடுப்பூசிகளானது மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதுபோக பைசர் நிறுவனத்திடம் இருந்து மொத்தம் 40 மில்லியன் கொரோனா தடுப்பூசிகளை வாங்கவும் இங்கிலாந்து அரசானது முடிவு செய்துள்ளது. நாட்டில் உள்ள 500-க்கும் மேற்பட்ட தடுப்பு மையங்களை அமைத்து இந்த பணியை சிறப்பாக செய்து வருகிறது அந்நாட்டு அரசு.
இதற்கிடையில் இங்கிலாந்தில் உருமாற்றம் பெற்ற புதிய வகை கொரோனா வைரஸ் அண்மையில் கண்டறியப்பட்டதால். அங்கு ஊரடங்கானது கடுமையாக்கப்பட்டுள்ளது.