பிரிட்டனில் பரவி வரும் உருமாறிய புதிய கொரோனா தொற்றுக்கு நேற்று (டிச.31) வரை இந்தியாவில் 25 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் இன்று மேலும் 4 பேருக்கு உருமாறிய கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் இந்தியாவில் புதிய உருமாறிய கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது.
பாதிக்கப்பட்ட அனைவரும் தனித்தனி அறையில் வைக்கப்பட்டு தொடர் கண்காணிப்பில் வைக்கப்படுள்ளனர். பிரிட்டனில் உருமாறிய கொரோனா அதிவேகமாக பரவி வருகிறது. இதனையடுத்து பிரிட்டனில் இருந்து வந்தவர்களை கண்டறிந்து அவர்களின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றன. இதற்கான பரிசோதனைகள் புவனேஸ்வர், பெங்களூரு, ஐதராபாத்தில் உள்ளிட்ட 10 ஆய்வகங்களில் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.