அமீரக அரசு செய்தி தொடர்பாளர் டாக்டர் ஒமர் அப்துல்ரஹ்மான் அல் ஹம்மாதி கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலை பற்றி சில கருத்துக்களை தெரிவித்துளார். அது இப்போது உலக அளவில் விவாதிக்கப்பட்டு வருகிறது.
அதில் அவர், உலகில் பரவிவரும் கொரோனா வைரசினுள் சில மரபணுமாற்றம் நிகழ்ந்து புதியவகை வைரசாக மாற்றமடைந்துள்ளது. அதிவேகமாக சில பிரதேசங்களில் அது பரவி வருகிறது.

ஆய்வகங்களில் சமீபத்தில் செய்யப்பட்ட ஆய்வுகளின்படி புதிய மாற்றமடைந்த வைரஸ் தடுப்பூசிக்கு கட்டுப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். தற்போதுள்ள புதிய வைரஸ் தொற்றை மனித நோய் எதிர்ப்புத்திறன் அதிக அளவில் திறனுடன் எதிர்கொள்வதாகவும் அறிந்துகொள்ள முடிகிறது.
சில நேரங்களில் இது வைரசை வலுவிழக்க செய்யவோ அல்லது அதன் திறனை கூட்டவோ செய்யலாம். தற்போதுள்ள ஆராய்ச்சிகளில் இந்த மரபணு மாற்றமானது எளிதாக மனித செல்லினுள் நுழைய வழிவகுக்கின்றது.எனவே இது குறித்த தவறான தகவல்கள் எதையும் பொதுமக்கள் பரப்ப வேண்டாம். தடுப்பூசியால் இந்த வகையை வைரஸ் தொற்றை எளிதாக எதிர்கொள்ள முடியும். விழிப்புடன் இருந்து நோய் தொற்றில் இருந்து தற்காத்துக்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருக்கின்றன.’’என அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.