சிலர் அடிக்கடி கழுத்து வலிப்பதாக புலம்புவதைக் கேட்டிருப்போம். அவர்களுக்கான டிப்ஸ் தான் இது.
இந்த கழுத்து வார்ம் அப் ஆனது மூளைக்குத் தேவையான ஆக்சிஜன் மற்றும் ரத்தம் சீராக்க உதவுகிறது. இதனால் மூளை செல்கள் அனைத்தும் புத்துயிர் பெற்று,
கழுத்து வலி குறைவதை உணர முடியும். மேலும் இறுக்கங்கள் நீங்கும்.
ஆரோக்கியமான உணவு, தூக்கம் எப்படி முக்கியமோ, அதுபோலத்தான் உடற்பயிற்சியும் முக்கியம். இந்த மூன்றையும் சரியான முறையில் பின்பற்றினால், உடல்நலக்குறைவும் வலிகளும் வராது.

முதலில் வார்ம் அப் நிலையில், உட்கார்ந்தபடியே கண்களைத் திறந்து, ஆழமாக மூச்சை இழுத்துக் கொள்ளுங்கள். மெதுவாக மூச்சு விட்டபடியே இடதுபுறமாகக் கழுத்தைத் திருப்பியவாறு மூச்சை உள் இழுத்தபடி பழைய நிலைக்கு வந்து, மூச்சை வெளியேவிட வேண்டும் இதுதான் முறை.
உங்கள் கழுத்தைத் திருப்பும்போது, இரண்டு விநாடிகள் அப்படியே வைத்திருக்க வேண்டும். இதேபோல், வலதுபுறம், மேல், கீழ் எனக் கழுத்தைத் திருப்பி நீங்கள் பயிற்சி செய்ய வேண்டும். கழுத்தை மட்டும் திருப்ப வேண்டும். இந்தப் பயிற்சியை மூன்று முறை செய்ய வேண்டும்.
இந்த பயிற்சியின் பலன்கள்: மூளைக்குத் தேவையான ஆக்சிஜன் மற்றும் ரத்தம் சீராகச் செல்லும். மூளை செல்கள் அனைத்தும் புத்துயிர் பெறும். கழுத்து வலி குறைவதை உணர முடியும். மேலும் இறுக்கங்கள் நீங்கும். கொஞ்சம் நேரம் ஒதுக்கி முயற்சித்துப் பாருங்களேன்.