ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயகின் அலுவலகத்திற்கு ஒரு மொட்டை கடிதம் சென்றுள்ளது. அந்த கடிதத்தில் “நவீன் பட்நாயக் உயிருக்கு எந்தநேரமும் ஆபத்து ஏற்படலாம். ஒப்பந்த கொலையாளிகள் எந்த நேரத்திலும் உங்களை தாக்கலாம். அவர்கள் முதல்வரை பின் தொடர்ந்து வருகிறார்கள். தயவு செய்து இது குறித்து முழுமையாக விசாரித்து நடவடிக்கை எடுக்கவும்” இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டிருந்தது.

மேலும் ஏ.கே 47 ரக்அ துப்பாக்கிகள், தானியங்கி துப்பாக்கிகளை அவர்கள் வைத்திருப்பதாக குறிப்பிட்டதுடன், சில கார்களின் பதிவு எண்களும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து ஒடிசா டி.ஜி.பி தலைமையில் பல்வேறு துறை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒடிசா முதல்வருக்கு வந்த கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.