ஆண்ட்ரியா நடிப்பில் மிஷ்கின் பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தை தற்போது இயக்கி வருகின்றார்.
இந்தப் படத்தை ராக்போர்ட் என்டர்டைன்மென்ட் என்கிற நிறுவனம் தயாரித்து உள்ளது இதற்கு இசையமைப்பாளராக இளையராஜாவின் மகனான கார்த்திக் ராஜா பணியாற்றி உள்ளார். இந்த படத்தின் பாடல் பதிவு குறித்து மிஸ்கின் ட்விட்டரில் பதிவுகள் செய்து வருகிறார் .
பாடகர் சித்ஸ்ரீராம் பாடல்கள் பாடுவது மட்டுமின்றி சில படத்திற்கு இசையமைத்து வருகின்றார். தனது மெல்லிய குரலில் பல பாடல்களை பாடி தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தை பிடித்துள்ளார். பாடிய பாடல்கள் அனைத்தும் பிரபலமடைந்தது. கடந்த வருடம் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான சைக்கோ படத்தில் சித் ஸ்ரீராம் பாடிய உன்ன நெனச்சி மற்றும் நீங்க முடியுமா என இரண்டு பாடல்களும் பாடி இருந்தார். இந்த இரண்டு பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை தொடர்ந்து மிஸ்கின் உடன் மீண்டும் இணைந்துள்ளார் பாடகர் ஸ்ரீராம். பிசாசு படத்திற்காக மெலோடி பாடலை பாடிய சித் ஸ்ரீராமை, மிஸ்கின் வியந்து பாராட்டியுள்ளார். அவரைப் பாராட்டி இவர் செய்த பதிவுக்கு ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.பிசாசு படத்தின் பாடல்கள் பதிவுகள் ஏறக்குறைய முடியும் நிலையில் இருப்பதாகவும் படத்தின் படப்பிடிப்பு ஒரு கட்டமாக முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும். விரைவில் முடிவுக்கு வரும் என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.