தென்காசி மாவட்டத்தை சேர்ந்தவர் பூங்கோதை. இவர் திருப்பூரில் உள்ள தனியார் பனியன் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்துவந்தார். அங்கு ராஜஸ்தானை சேர்ந்த ஜோகிந்தர் என்பவரும் பணிபுரிந்த நிலையில் இவர்கள் இருவருக்கும் காதல் ஏற்பட்டது. இவர்களுக்கு சில மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் நடந்த நிலையில் தனியாக வாடகைக்கு வீடு எடுத்து வசித்தனர்.

திருமணமான சில மாதங்களுக்கு பிறகு கணவன் மனைவிக்கிடையே இடையே அடிக்கடி சண்டை நடந்து வந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் , இன்று பூங்கோதையின் வீடு பூட்டப்பட்டு இருந்த நிலையில் சாவி வெளியே இருந்துள்ளது. சந்தேகமடைந்த பக்கத்து வீட்டுக்காரர் பூங்கோதையின் வீட்டைத் திறந்து பார்த்த போதுதான் , உள்ளே அவர் இறந்து கிடந்தார். பூங்கோதையின் கணவர் ஜோகிந்தர், பூங்கோதையை கொலைசெய்துவிட்டு மாயாமாகி விட்டார் .
சம்பவம் குறித்து தகவலறிந்து அங்கு வந்த போலீசார் பூங்கோதை உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். ஜோகிந்தர் பிடிபட்ட பின்பே கொலை பற்றிய முழு விபரமும் தெரியவரும்.