உலகப் பணக்காரர்களுள் டாப் இடத்தைத் தொடர்ந்து தக்கவைத்து வரும் இந்தியாவின் பெரும் பணக்காரர் ஆன முகேஷ் அம்பானியின் குடும்பத்தில் முதல் பேரன் பிறந்த செய்தி நேற்று மிகவும் வைரலானது.
இந்நிலையில் தற்போது தாத்தா முகேஷ் அம்பானி தனது பேரக் குழந்தையுடன் எடுத்துக்கொண்ட முதல் புகைப்படம் வைரல் பட்டியலில் வந்துள்ளது. முகேஷ் அம்பானியின் மூத்த மகன் ஆகாஷ் அம்பானிக்கும் ஷ்லோகா மேத்தாவுக்கும் கடந்த 2019 மார்ச் மாதம் திருமணம் நடைபெற்றது. ஆகாஷ்- ஷ்லோகா தம்பதியர் தங்களது முதல் குழந்தையை மிகவும் மகிழ்ச்சியுடன் வரவேற்று கொண்டாடி வருகின்றனர்.
தாத்தா முகேஷ் அம்பானி பேரனுடன் எடுத்துக்கொண்ட முதல் புகைப்படத்தை மும்பையைச் சேர்ந்த பிரபல புகைப்படக் கலைஞர் மானவ் மங்லானி வெளியிட்டிருந்தார். இதுவே தற்போது சர்வதேச அளவில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.