மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி வானொலி வாயிலாக மக்களிடம் உரை நிகழ்த்தினார். அதில், ‘’தற்சார்பு இந்தியா திட்டத்தின் ஒருபகுதியாக உள்ளூர் பொருட்களை ஆதரிப்போம் என்னும் இயக்கத்தை மத்திய அரசு முன்னெடுத்தது. இதற்கு மக்கள் நல்ல ஆதரவுதந்தனர். இதேபோல் வெளிநாட்டுப் பொருள்களின் பயன்பாட்டை மக்கள் குறைத்துக்கொள்ள வேண்டும். அதற்கு மாற்றாக, உள்நாட்டுப் பொருள்களையே பயன்படுத்துவதை புத்தாண்டு தீர்மானமாக உறுதிமொழி ஏற்கவேண்டும். உலகத்தரம் வாய்ந்த பொருள்களை நிறுவனங்கள் இந்தியாவிலேயே உற்பத்தி செய்யவேண்டும். தொழில்நிறுவனங்களும், ஸ்டார்ட் அப் நிறுவனங்களும் அதற்கு முன்வர வேண்டும்.
தற்போது மக்கள் பயன்படுத்திவரும் வெளிநாட்டுப் பொருள்களை பட்டியல் செய்து அதற்கு மாற்றான இந்தியப் பொருள்களை பட்டியல் இட வேண்டும். நாட்டில் சிறுத்தைகளின் எண்ணிக்கையும், வனப்பரப்பும் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. ‘’என்றார்.