அமெரிக்க ராணுவத்தின் மிக உயரிய விருதினை அந்நாட்டு அதிபர் டிரம்ப் நமது இந்தியப் பிரதமர் நரேந்திரமோடிக்கு வழங்கி கெளரவித்து உள்ளார். இதுகுறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.
நரேந்திரமோடிக்கு ‘லீஜன் ஆப் மெரிட்’ என்னும் விருதை அமெரிக்கா வழங்கியுள்ளது. இந்த விருதை அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் தரன்கித் சிங் சாந்துவிடம், அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் ஓபிரையன் வெள்ளை மாளிகையில் நடந்த நிகழ்ச்சியின் போது வழங்கினார். இந்தியா_அமெரிக்கா இடையேயான நல்லுறவை மேம்படுத்துவதில் மோடி வெளிப்படுத்திவரும் தலைமைப்பண்புக்காக அவருக்கு அந்த விருது வழங்கப்பட்டுள்ளது.