திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ராயபுரத்தில் நடந்த கூட்டத்தில் வண்டவாளம்…தண்டவாளம் என ரைமிங்காக பேசியது தொண்டர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.
ராயபுரத்தில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய மு.க.ஸ்டாலின், ‘ராயபுரம் தொகுடிக்கும் திமுகவுக்கும் இருக்கும் தொடர்பு, அண்ணா ராபின்சன் பூங்காவில் திமுகவை உருவாக்கியது என நினைவுகூர்ந்தார். தொடர்ந்து அவர் பேசும்போது, ‘பொள்ளாச்சியில் மகளிரணி சார்பில் நடந்த பாலியல் வன்கொடுமைக்கு எதிரான ஆர்ப்பாட்டத்துக்கு சென்ற திமுக எம்.பி கனிமொழி பாதியிலேயே தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார். அவர் அங்கு கலந்துகொண்டு பேசினால் அதிமுக அரசின் வண்டவாளம்..தண்டவாளம் ஏறிவிடும் என்பதாலேயே இப்படி செய்கின்றனர். நான் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள வலியுறுத்தினேன். அப்படி ஒருவேளை இடையூறு செய்தால் தமிழகம் முழுவதும் பெண்களைத் திரட்டிக்கொண்டு நானே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவேன்.’’என்றார் அவர்.
மு.க.ஸ்டாலினின் வண்டவாளம்..தண்டவாளம் ரைமிங் பெரும் வரவேற்பைப் பெற்றுவருகிறது.