அமெரிக்கவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள நெவர்லாந்தில் மறைந்த பிரபல பாப் இசை பாடகர் மைக்கேல் ஜாக்சனின் பண்ணை வீடு அமைந்துள்ளது.
சுமார் 2,700 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த பண்ணை வீட்டில் 12,500 சதுர அடியில் தாய் வீடு, 3,700 சதுர அடி கொண்ட நீச்சல் குளத்துடன் கூடிய கட்டமைப்பு, 50 பேர் வரை அமர்ந்து பார்க்கும் வசதி கொண்ட திரைப்பட ஸ்டுடியோ, நடன அரங்கம், பொழுது போக்கு பூங்கா, சிறிய ரயில் நிலையம் மற்றும் பல நவீன வசதிகள் உள்ளன. மேலும் ஒரு மிருக காட்சி சாலையும் இந்த வீட்டில் இருந்ததாக கூறப்படுகிறது. அதில் மைக்கேல் ஜாக்சன் தனக்கு பரிசாக அளிக்கப்பட்ட ஒரு யானையையும், ஒரு உரங்குட்டானையும் பராமரித்து வந்ததாகவும் கூறப்பட்டது.
சிறுவர்களை பாலியல் துன்புறுத்தல் செய்வதற்காக அவர்களை கவருவதற்காக மைக்கேல் ஜாக்சன் கட்டியுள்ள ஒரு மாய உலகம்தான் இந்த வீடு என்று 1990 களில் அவர் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டு இது தொடர்பாக ஒரு வழக்கும் அவர் மீது பதிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் அந்த வழக்கில் அவர் விடிவிக்கப்பட்டார்.
மறைந்த பிரபல பாப் பாடகரான மைக்கேல் ஜாக்சனின் நெருங்கிய நண்பரான ரோன் பர்க்கிள் இந்த பண்ணை வீட்டை 22 மில்லியன் டாலர் (சுமார் 161 கோடி) விலைக்கு வாங்கியுள்ளார்.