தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தமிழகம் முழுவதும் 16 ஆயிரம் வி.ஏ.ஓ-க்களை கொண்டுவந்தது எம்.ஜி.ஆர் தான். சசிகலா வருவதனால் எந்தவித தாக்கமும் தமிழகத்தில் ஏற்படபோவதில்லை. அவர்களும், அவர்களை சார்ந்தவர்களும் இல்லாத நிலையில்தான் கட்சி சிறப்பாக வழிநடத்தப்படுகிறது. சசிகலா வருகை எந்தவித அதிர்வலையையும் ஏற்படுத்தபோவதில்லை. வேண்டுமென்றால் ஒரு மாயையை ஏற்படுத்துவார்கள். அந்த குடும்பத்தினரிடம் ஏகப்பட்ட பணம் இருக்கு. அதை வைத்து செயற்கையாக ஒரு மாயையை ஏற்படுத்தலாம்.
அதனால் தமிழகத்திலும் சரி, எங்களுக்கும் சரி எந்தவித தாக்கமும் இருக்காது. அ.ம.மு.க-வை ஒரு கட்சியாகவே நினைக்கவில்லை, அப்புறம் என்ன இணைப்பு பற்றி பேசுவது. குருமூர்த்தி சொன்னதை பற்றி பொருட்டாகவே எடுத்துக்கலை. அ.தி.மு.க-வில் இருந்து யாரும் அங்கு போகமாட்டார்கள். எம்.ஜி.ஆர் காலத்திலும், அம்மா காலத்திலும் இருந்ததுபோல கட்சி இருக்கும்” என்றார்.