இன்று தமிழகம் முழுவதும் அதிகம் உச்சரிக்கப்படும் வார்த்தைகளில் ஒன்று தான் மாஸ்டர்.இந்த திரைப்படம் கடந்த ஏப்ரலுக்கேஎ ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக இந்த திரைப்படம் தள்ளிப்போனது.
பல முன்னணி ஒடிடி நிறுவனங்கள் இந்த படத்தின் உரிமையை பெற்ற முயற்சி செய்தனர். இதனால் சுமார் 10 மாதங்கள் முடிந்த நிலையில் இந்த படம் இன்னும் வெளியாகாமல் இருக்கிறது .இந்த படம் வருகிற ஜனவரி 13ஆம் தேதியன்று திரையரங்குகளில் திரையிடப்பட உள்ளது. இந்த முடிவை ஆதரித்துப் பல சினிமா பிரபலங்கள் தங்களின் சமூக வலைத்தளப் பக்கத்தில் அவர்களது வாழ்த்துக்களையும் பகிர்ந்து வருகின்றனர்.
அதேபோல் இயக்குனர் மிஷ்கின் அவருடைய டுவிட்டர் பக்கத்தில்இதுகுறித்து டுவிட் செய்துள்ளார். அதில் அவர், ‘’படங்கள் இல்லாமல் நம் வாழ்க்கை அர்த்தமற்றதாகிவிடும் மீண்டும் குடும்பத்துடன் திரையரங்கம் செல்வோம். நாம் ஜனவரி 13ஆம் தேதியன்று திரையரங்குகளில் மாஸ்டர் படத்தை பார்க்க ஆர்வமாக நான் உள்ளேன் .அனைத்து சினிமா விரும்பிகளும் மீண்டும் திரையரங்கம் செல்வார்கள். சினிமா துறை மீண்டும் எழுச்சி பெறும் என்று நான் நம்புகிறேன் என்று அவர் ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். தற்போது இந்த ட்விட்டை தளபதி ரசிகர்கள் இணையதளத்தில் கொண்டாடி வருகின்றனர்.