தளபதி விஜய் நடித்த மாஸ்டர் படம் கடந்த பொங்கல் தினத்தன்று வெளியாகி திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வருகிறது.அதில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்து இருக்கின்றார்.கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். விஜய் படங்களின் முந்தைய வசூல் சாதனையை மாஸ்டர் படம் தற்போது முறியடித்துள்ளது. மாஸ்டர் திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் சிறப்பான வசூலை பெற்றுள்ளது.
கடந்த ஆறு நாட்களில் இந்த படம் உலக அளவில் 150 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இத்தனைக்கும் அரசு விதித்த கட்டுப்பாடுகள் எல்லாத் திரையரங்குகளிலும் 50 சதவீத டிக்கெட்டுகள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. எல்லா விஜய் படங்களைப் போல இந்தப் படமும் பல பிரச்சனைகளை சந்தித்து திரைக்கு வந்தது முதலில் படத்தை திரையரங்குகளில் ரிலீஸ் செய்வதா? அல்லது இணையதளங்களில் ரிலீஸ் செய்வதா? என்ற பிரச்சனை எழுந்தது. பேச்சுவார்த்தைகள் மூலம் இந்த பிரச்சனைகள் தீர்வுக்கு வந்தது. ஆனால் படம் வெளியாவதற்கு ஒரு நாள் முன்பு இந்தப் படத்தினுடைய சில காட்சிகள் இணையதளங்களில் வெளியாகி வைரல் ஆனது. இதற்கு ஒரு தனியார் டிஜிட்டல் நிறுவனம் காரணம் என்று குற்றம்சாட்டப்பட்டது.
இந்த நிலையில் மாஸ்டர் தயாரிப்பாளர் சட்டவிரோதமாக கசிந்த காட்சிகளுக்கு இழப்பீடு கோர முடிவு செய்துள்ளார் .மாஸ்டர் படத்தை தயாரித்த செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் இணை தயாரிப்பாளர் லலித் குமார் ரூபாய் 25 கோடி இழப்பீடு கேட்டு தனியார் நிறுவனத்திற்கு நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது.