விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள மாஸ்டர் திரைப்படம் கடந்த மாதமே ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளதாக செய்திகள் வெளிவந்ததன.ஆனால் படத்தின் தயாரிப்பாளர் இரவோடு இரவாக அதனை மறுத்து ட்வீட் போட்டிருந்தார். அதன் தொடர்ச்சியாக திரையரங்க உரிமையாளர்களும் ரசிகர்களும் தியேட்டரில் தான் வெளியாக வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கத் தொடங்கினார். பொங்கலன்று உலகம் முழுக்க ரிலீஸ் ஆகும் என்று உத்தரவாதத்தை தயாரிப்பு தரப்புக் கொடுத்தது.
அதன் பின்னர் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இப்போது அந்த எண்ணத்தில் இடி விழுவதுபோல் ஒரு செய்தி வெளியாகியுள்ளது. லண்டனில் தொடங்கிய ‘கொரோனா வைரஸின் இரண்டாம் அலை’ முந்தைய வைரஸை விட மிக தீவிரமாக பரவிவருகிறது என்று பீதி கிளம்பியுள்ள நீலையில் வேறு சிலநாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும் விதமாக கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கத் தொடங்கி உள்ளனர். இங்கே தான் ‘மாஸ்டர்’ படமும் சிக்கலில் மாட்டுகின்றது.

தமிழகத்தில் வெளியாக இருக்கும் அதே நேரத்தில் பிற மாநிலங்களிலும், உலகம் முழுவதும் படம் வெளியானால் தான் படத்தின் பட்ஜெட்டுக்கு ஏற்ப லாபமும் அதிகரிக்கும். அப்படியில்லாமல் தமிழத்தில் மட்டும் வெளியானால் படம் கண்டிப்பாக ‘ஹிட்’டடிக்கும். ஆனால், தயாரிப்பாளர் எதிர்பார்க்கிற அளவுக்கு லாபம் வராது. அதனால் குழப்பத்தில் இருக்கிறது தயாரிப்பாளர் தரப்பு! எந்த சிக்கலுமில்லாமல் ரிலீஸ் ஆகணும்னு என விஜய் ரசிகர்கள் வேண்டி வருகின்றனர். இப்போதைக்கு இதைத் தவிர விஜய் ரசிகர்களுக்கு வேறு வழியில்லை. மாஸ்டர் பொங்கலுக்கு வருமா என தவம் இருக்கின்றனர் தளபதி ரசிகர்கள்.