தமிழ் சினிமாவின் உள்ள முன்னணி நடிகர்களான ரஜினி ,கமல் ,விஜய் அஜித் ஆகியோரின் பட ரிலீஸின்போது முதல் நாள் முதல் காட்சி பார்த்து விட வேண்டும் என்பது அவர்களது ரசிகர்களின் கனவாக இருந்து வருகிறது. இதன் காரணமாக ஒவ்வொரு திரையரங்கு உரிமையாளர்களும் முதல் நாள் டிக்கெட்டின் விலை அதிகமாக வைத்து விற்பனை செய்து வருகின்றனர்.
எவ்வளவு பணம் கொடுத்தாவது தனது தலைவர் படத்தை பார்த்து விட வேண்டும் என்கிற எண்ணம் எல்லா ரசிகர்கள் மத்தியிலும் நிலவும். இதுதான் திரையரங்க ஓனர்களின் மூலதனம். இதை வைத்துக்கொண்டு ஒவ்வொரு முன்னணி நடிகர்களின் பட வெளியீட்டின் போது ஆயிரக்கணக்கான டிக்கெட்களை விற்பனை செய்து வசூல் செய்து வருகின்றனர். அதுவும் ஆறு மாதங்களுக்கு மேல் திரையரங்குகள் மூடி இருப்பதால் தற்போது திரையரங்க உரிமையாளர்கள் சும்மா இருப்பார்களா? மாஸ்டர் படத்தின் மூலம் தற்போது வசூல் வேட்டையாட காத்துக்கொண்டிருக்கின்றனர்.
மா ஸ்டர் படம் மொத்த கலெக்சனில் வசூல் சாதனை செய்கிறதோ..இல்லையா? மாஸ்டர் படத்தி முதல்நாளை மையமாக வைத்து வசூல் செய்ய ஆரம்பித்துவிட்டனர் அந்த வகையில் ஜனவரி 13-ஆம் தேதி முதல் நாள் முதல் காட்சி ஒரு டிக்கெட் விலை இதுவரை இல்லாத அளவுக்கு தற்போது உச்சத்தில் இருந்து வருகிறது. ஒரு டிக்கெட்டின் விலை சில திரையரங்குகளில் கிட்டத்தட்ட 5000 ரூபாய்வரை விற்கப்படுகின்றனர். இது ஒன்றும் பெரிய ஆச்சரியம் இல்லை.இந்தமுறை கிராமப்புறங்களில் இருக்கும் திரையரங்குகளில் கூட 1000 முதல் 2000 வரை முதல் நாள் முதல் காட்சி டிக்கெட்களை விற்பனைக்கு வருகின்றன. இன்னும் ரிலீசுக்கு சில நாட்களே உள்ளதால் மாஸ்டர் படத்தின் டிக்கெட் விலை அதிகமாக வாய்ப்பு இருக்கிறது என்றும் சமூக வலைத்தளத்தில் தகவல் உலாவருகிறது.