நடிகர் விஜய் கதாநாயகனாக நடிக்கும் மாஸ்டர் திரைப்படம் பொங்கலுக்கு தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறது. இந்த சினிமாவின் எதிர்பார்ப்பை அதிகரிக்கும் வகையில் டிரைலர் கூட வெளியிடாமல், சில நிமிடங்கள் மட்டுமே ஓடும் டீசர் மட்டுமே வெளியிடப்பட்டது.
இந்த நிலையில் மாஸ்டர் படத்தின் சில காட்சிகள் இணையத்தில் வெளியாகி படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த காட்சியில் வாழைப்பழத்துடன் விஜய் அறிமுகமாகும் சீன்ம் சட்டையில்லாமல் டைட்டானிக் காதல் கதையை தனது காதல் கதை போல ஒருவரிடம் விஜய் சொல்லும் காமெடிக் சீன், நாசருடன் காரில் பயணித்தபடியே விஜய் உரையாடும் காட்சி என அடுத்தடுத்து கத்தரித்து வெளியிடப்பட்டுள்ளது. மாஸ்டர் திரைக்கு வரும் முன்னே இணையத்தில் காட்சிகள் வெளியானது ரசிகர்களையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது