தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம் வருபவர் நடிகர் விஜய். தற்போது இவருடைய நடிப்பில் வெளியாக காத்துக்கொண்டிருக்கும் திரைப்படம் “மாஸ்டர்”. இந்த படம் கடந்த ஏப்ரல் மாதமே வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்தப் படத்தின் தேதி தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது.
இந்த திரைப்படம் சமீபத்தில் தீபாவளி அன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே போனதால் இந்தப்படத்தின் வெளியீட்டு தேதியும் தள்ளிக்கொண்டே போகிறது. சமீபத்தில்கூட இந்த படம் இணையதளத்தில் வெளியாகும் என்று செய்திகள் வெளியாகின. ஆனால் இந்தப் படத்தின் தயாரிப்பாளர் படம் தியேட்டரில்தான் வெளியாகும் என்று ரசிகர்களை சந்தோஷப்படுத்தும் விதமாக அறிவித்தார்.தற்போது இந்த படம் பொங்கலன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரிப்பதற்காக தினமும் ஏதாவது ஒரு புகைப் அல்லது படத்தினுடைய அப்டேட்டை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றடு படக்குழு.அந்த வகையில் விஜய்யின் “மாஸ்டர்” படத்திற்கு ஹிந்தியில் “விஜய் தி மாஸ்டர்” என பெயர் வைத்துள்ளனர். இதனை படக்குழுவினர் புதிய போஸ்டர் மூலம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர்