சிங்கப்பெருமாள் கோவில் அருகே 24 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் நடுரோட்டில் ஓட ஓட வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள் கோவில் சேர்ந்தவர் அஜித். இவருடைய வயது 24. இவர் கழிவு நீர் உறிஞ்சும் வாகனத்தை சொந்தமாக இயக்கி வருகின்றார். இவர் மீது ஏற்கனவே கொலை முயற்சி வழக்கு ஒன்று இருக்கின்றது. இந்த நிலையில் சிங்கபெருமாள்கோவில் பகுதிகளில் உள்ள தனியார் மருத்துவமனை அருகே ivar நடத்து வரும் போது 3 மர்ம நபர்கள் அஜித் குமார் அரிவாளால் வெட்டியுள்ளனர். சுதாகரித்துக் கொண்ட அஜித்குமார் தப்பிக்க முயன்று ஓட ஆரம்பித்துள்ளார்.
பின்னாலேயே துரத்தி வந்த மர்ம கும்பல் அஜித்குமாரை நடுரோட்டில் வைத்து வெட்டி சாய்த்து உள்ளனர்.அதன் பின்னர் இந்த தகவல் போலீசாருக்கு தெரிய வந்துள்ளது உடனே தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மறைமலைநகர் காவல்துறையினர் அஜித்குமாரின் சடலத்தை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .அஜீத் குமாரை வெட்டும் போது அங்குள்ள தெருவிளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டு கடைகளும் அடைக்கப் பட்டுள்ளது. சினிமா பாணியில் இந்த கொலையை செய்துள்ளனர். அசுரன் திரைப்படத்தில் கென் எதிரியை வெட்டும் போது இதே போல் தனுஷ் விளக்கை அணைப்பார்.
அஜீத் குமாரை கொலை செய்த குற்றவாளியை கண்டுபிடிக்க கோரி உறவினர்கள் அனைவரும் சம்பவ இடத்தில் ஒன்று கூடியதால் தற்போது அந்த பகுதியில் பெரும் பதட்டமான நிலை ஏற்பட்டுள்ளது.