வடிவேலு வின் ஒரு நகைச்சுவை காட்சியில் லேடன் கிட்ட பேசுறியா பின்லேடன்.……! என ஒரு நபரை மிரட்டுவார் அது மிகவும் புகழ்பெற்ற காட்சியாக தற்போது வரை வலம் வந்து கொண்டிருக்கிறது.
இந்த சம்பவத்தைப் போலவே தெருவோரத்தில் இருக்கும் இருவர் சண்டையிட்டு உள்ளனர். சண்டையிட்ட நபர்களில் ஒருவர் பாஜக பிரமுகர் எனவும் பாஜகவே என் பின்னால் இருக்கிறது எனவும் பேசும் வசனங்கள் நெட்டிசன்களுக்கு சிறப்பான கண்டெணட்களாக அமைந்துள்ளது. அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
சென்னை திருவல்லிக்கேணியில் நடந்துள்ள இந்த சம்பவம் சாதாரண ஒரு சிக்கன் ரைஸ் விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பி.ஏ.வையும் கோர்த்து விட்டுள்ளார் அந்த பாஜக பிரமுகர் அவர் செய்த அலப்பறை வீடியோ தான் இப்போது ஹாட் டாபிக் . அந்த பிரமுகர் சென்னை திருவல்லிக்கேணி பகுதி செயலாளர் எனவும் பாஜக ஆள்னா மரியாதையே இல்லையா என மிரட்டுவதுமான காட்சிகள் வீடியோவில் இடம்பெற்றுள்ளன.