கோவையின் ஓண்டிக்காரன் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் சுதர்சன் இவருடைய வயது 26. இவரது மனைவி சத்யா 23 இவர்கள் இருவரும் கூலி வேலை பார்த்து வந்துள்ளனர். இந்த தம்பதிக்கு ஐந்து வயதில் குழந்தையும் இருக்கிறது. இந்நிலையில் இவர்கள் வீட்டுக்கு அருகில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ரஞ்சித்(22) என்பவர் வசித்து வந்துள்ளார்.

இந்தநிலையில் சுதர்சனின் மனைவிக்கும் ரஞ்சித்துக்கும் பல மாதங்களாக தொடர்பு இருந்து வந்துள்ளது. இதை சுதர்சன் தெரிந்து கண்டித்துள்ளார் இந்த நிலையில் ரஞ்சித் அவரிடம் மன்னிப்பு கேட்டு அதன் பின்னர் இருவரும் நண்பர்களாகி உள்ளனர். சுதர்சன் சமாதானம் அடைந்ததை தொடர்ந்து ரஞ்சித், சுதர்சன், சத்யா மூன்று பேரும் மது அருந்தி வந்துள்ளனர். பின்னர் கோழிக்கறி வாங்க சுதர்சன் கடைக்கு சென்றுள்ளார் சுதர்சன் வீட்டுக்கு திரும்பியபோது ரஞ்சித்தும் சத்யாவும் நெருக்கமாக இருந்து வந்துள்ளனர்.
இதனைப் பார்த்து ஆத்திரமடைந்த சுதர்சன் அங்கிருந்து இரும்புக் கம்பியை எடுத்து இருவரையும் சரமாரியாக அடித்து உள்ளார். தாக்குதலில் தலையில் பலத்த காயமடைந்த சத்யா சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார். ரஞ்சித்துக்கும் பலத்த காயம் ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்துள்ளார் பின்னர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார் இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர் .போலீசார் அங்கு வந்து சத்யாவின் உடலை கைப்பற்றி ரஞ்சித்தை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர் இதனோடு மனைவியை கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய சுதர்சனை போலீசார் தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர்.