ராதாபுரத்தில் காதல் திருமணம் செய்து பிரிந்து இருந்த நிலையில் விவகாரத்து கேட்டுவந்த மனைவியை கணவர் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் சரவணன். இவர் டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார் அதே பகுதியைச் சேர்ந்த தனியார் பள்ளியில் ஆசிரியராக இருந்தவர் தான் சிவபாலா. இவர்கள் இருவரும் 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்தனர். மாலைநேர கல்லூரியில் படித்துவந்த சிவபாலாவும், டிரைவராக இருந்த சரவணனும் காதலித்து திருமணம் செய்துள்ளனர். இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் இருக்கின்றனர்.
சரவணன் அவரது மனைவி சிவபாலாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு உள்ளதால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளது.அதனால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். சரவணன் பலமுறை தன்னுடன் வந்துவிடுமாறு ஊர் மக்களை வைத்து பேச்சுவார்த்தையும் நடத்தி வந்துள்ளார் ஆனால் அதற்கு சிவபாலா மறுப்பு தெரிவித்துள்ளார். என்று தெரியவருகிறது. மேலும் சிவபாலா அவனுடன் வாழ பிடிக்கவில்லை என கூறி விவாகரத்து கேட்டு வந்துள்ளார். இதுகுறித்து வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று காலை நீதிமன்றத்தில் ஆஜராகி விட்டு சிவபாலா எஸ்பி அலுவலகம் அருகே சென்று கொண்டிருந்தபோது அவரை பின்தொடர்ந்த சரவணன் மனைவி சிவபாலாவை வழிமறித்து சரமாரியாக வெட்டி படுகொலை செய்துள்ளார். அலறல் சத்தம் கேட்டு அந்த பகுதி மக்கள் தப்பியோடிய சரவணனை மடக்கிப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்தனர் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி உள்ளனர் தற்போது இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.