தன் சகநண்பனிடம் சவால் விட்டதால் வாலிபர் ஒருவர் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர் முருகன். கருத்து வேறுபாடு காரணமாக தன்னுடைய மனைவியை பிரிந்து திருப்பூரில் உள்ள அவருடைய உறவுக்காரர் சக்திவேல் என்பவர் உடன் தங்கி உள்ளார். முருகன், அங்கு இருந்தபடியே அருகில் உள்ள பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார். இந்தநிலையில் பல்லடம் சாலையில் உள்ள தெற்கு பாளையம் பகுதியில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் முருகன் சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர் இதுதொடர்பாக முருகனின் உறவுக்காரரான சக்திவேலை விசாரித்தபோது அவர் முருகனை கொலை செய்ததை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் கொடுத்தார்.
அந்த வாக்குமூலத்தில் மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வந்த முருகன் சக்திவேலிடம் அவரது உறவுக்காரப் பெண்ணை தனக்கு திருமணம் செய்து வைக்கக்கோரி தொடர்ந்து வற்புறுத்தி உள்ளார். ஆனால் இதற்கு சக்திவேல் மறுப்பு தெரிவித்து வந்த நிலையில் அந்த பெண்ணிடம் தவறாக நடந்து காட்டுகிறேன் என்று முருகன் சக்திவேலுவிடம் சவால் விட்டுள்ளார் இதனால் கோபமடைந்த சக்திவேலும் அவரது நண்பர் கிருஷ்ண குமாரும் சேர்ந்து மது போதையில் இருந்த முருகனை கடுமையாக அடித்து உதைத்துள்ளனர்.
இதனால் அவர் நிலைகுலைந்து கீழே விழுந்ததால் கத்தியால் கழுத்தை அறுத்து உடலை மட்டும் வீசிவிட்டு இருவரும் தப்பி ஓடி உள்ளனர் இதனையடுத்து சக்திவேல் மற்றும் கிருஷ்ணகுமார் ஆகிய இருவரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்