சென்னையில் உள்ள புதுப்பேட்டை அருகே மதுபோதையில் இருந்த நண்பர், சக நண்பனை ‘என் மனைவியுடன் நீ எப்படி பேசலாம்’ என்று கூறியபடி கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு தப்பிச்சென்றார் இந்த சம்பவம் குறித்து சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
சென்னையில் உள்ள கண்ணகிநகரைச் சேர்ந்தவர் சந்தோஷ் சிவன். புதுப்பேட்டையில் மீன் பாடி வண்டி ஓட்டும் கூலி வேலை செய்து வந்துள்ளார் .சந்தோஷ் உடைய மனைவி இறந்த நிலையில் ஒரு மகன் மட்டும் அவரது அத்தை வீட்டில் தங்கி வசித்து வந்துள்ளார் இவர் நேற்று இரவு வேலையை முடித்துவிட்டு அங்கு உள்ள தனது மீன்பாடி வண்டியில் படுத்து உறங்கிக்கொண்டிருந்தா.ர் இந்த நிலையில் சந்தோசின் நண்பர்களான இளவரசன் மற்றும் அருண்குமார் ஆகியோர் அங்கு வந்துள்ளனர் அப்போது மூன்று நண்பர்களும் மது போதையில் இருந்துள்ளனர் . அருண்குமார் மற்றும் இளவரசன் ஆகியோர் சந்தோஷ் குமாரை தனது மனைவியுடன் நீ எப்படி பேசுவாய் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஒரு கட்டத்திற்கு மேல் வாக்குவாதம் முற்றி ஆத்திரமடைந்த அருண் குமார் மற்றும் இளவரசன் ஆகிய இருவரும் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் சந்தோஷின் கழுத்தை அறுத்து விட்டு அங்கிருந்து தப்பித்து ஓடி விட்டார்கள்.
இதில் பலத்த காயமடைந்த சந்தோஷ்குமார் ரத்த வெள்ளத்தில் மிதந்து துடிதுடித்து பரிதாபமாக உயிரை இழந்தார். இந்த சம்பவம் குறித்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சந்தோஷ்குமார் உடைய உடலை அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள இளவரசன் மற்றும் அருண்குமார் ஆகிய இருவரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர் இந்த நிலையில் சந்தோஷ்குமார் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யும் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது. இந்த சிசிடிவியில் சந்தோஷ்குமாரின் என் கழுத்தை இளவரசன் மற்றும் அருண்குமார் ஆகியோர் காட்சி மிக தெளிவாக பதிவாகி இருக்கின்றது.