பல்லாவரம் அருகே அனகாபுத்தூர் பகுதியை சேர்ந்தவர் சரன்ராஜ் இவருடைய வயது 31. எலக்ட்ரீசியன் ஆக பணியாற்றி வந்துள்ளார் இவரது மனைவி சன்மா கர்ப்பமாக இருப்பதால் தனது தாய்வீடான ஓட்டேரி பிரெஸ்லி நகர் 3வது தெருவில் வசித்துவந்தார்.

அவரை பார்ப்பதற்காக சரண்ராஜ் நேற்று முன்தினம் மாலை வந்த போது அதே பகுதியைச் சேர்ந்த மதி ராசு, நல்லப்பன் உள்ளிட்ட 5 பேர் முன்விரோதம் காரணமாக சரண்ராஜை கத்தியால் தலை மற்றும் கையில் வெட்டி உள்ளனர் அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர் புகாரின்பேரில் ஓட்டேரி போலீசார் தற்போது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது இந்த சம்பவம் ஓட்டேரி மட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.