திருச்செந்தூர் அருகே பரமன்குறிச்சி இசக்கியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கோயில் மணி. இவருடைய மகன் ஜேசையா. இவருடைய வயது 34. இவர் பரமன்குறிச்சி உடன்குடி ரோட்டில் உள்ள ஒரு ஓட்டல் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு தபால் அலுவலகம் அருகில் வசிக்கும் ஜெயகாந்தன் என்பவரும் சியோன் நகரைச் சேர்ந்த கனகராஜ் என்பவரும் பரமக்குடியைச் சேர்ந்த முத்து கிருஷ்ணன் ஆகியோரும் பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது கனகராஜ், ஜெயகாந்தனுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இருவரையும் சமாதானமாக செல்லும்படி ஜேசையா கூறியுள்ளார். அவரை ஜெயகாந்தன் அவதூறாக திட்டியதோடு கொலை மிரட்டல் விடுத்து அரிவாளால் வெட்டினார்.இதில் படுகாயம் அடைந்த அவர் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இதுகுறித்து திருச்செந்தூர் போலீஸ் எஸ்ஐ கனகராஜ் வழக்குப்பதிவு செய்து தற்போது தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்