மேற்குவங்க முதல்வர் ம,தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து முக்கியப் பிரமுகர்கள் வரிசையாக வெளியேறிவருகின்றனர். இது மேற்கு வங்க அரசியலில் அதிர்வை ஏற்படுத்தி உள்ளது.

மேற்குவங்கத்தில் தமிழகத்தைப் போலவே மே மாதம் தேர்தல் நடக்க இருக்கிறது. இந்நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மைப்பிரிவு பொதுச் செயலாளர் கபீருல் இஸ்லாம், எம்.எல்.ஏ சில்பத்ரா தத்தா, முன்னாள் சுவெண்டு, ஜிதேந்திர திவாரி எம்.எல்.ஏ ஆகியோர் வெளியேறியுள்ளனர். வேட்பாளர் தேர்வில் பிரசாந்த் கிஷோர் தலையிடுவதால் தான் கட்சியில் இருந்து பலரும் வெளியேறுவதாக பராக்பூர் எம்.எல்.ஏ சில்பத்ரா தத்தா தெரிவித்துள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் திபான்சு சவுத்ரியும் ராஜினாமா செய்துள்ளார். இதனிடையே கல்கத்தாவுக்கு நாளை அமித்ஷாவும் வருகிறார். அந்த மேடையில் இவர்கள் பாஜகவில் இணைவார்கள் என கூறப்படுகிறது.